நீலமங்கலத்தில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டஅமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் புதிய வகுப்பறைகள் திறப்பு. - தமிழக குரல் - காஞ்சிபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 28 September 2023

நீலமங்கலத்தில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டஅமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் புதிய வகுப்பறைகள் திறப்பு.

 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி நீலமங்கலத்தில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டஅமைப்பு மேம்பாட்டு திட்டம் சி எஃப் எஸ் ஐ டி எஸ் 2022 மற்றும் 2023 திட்டத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 28.34 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பு வரை கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. 


இந்த தொடக்கப்பள்ளியை ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சுந்தர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் காஞ்சி மாவட்ட பெருந்தலைவர் படப்பை மனோகரன். குன்றத்தூர் ஒன்றிய முழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன்  இந்த விழாவில் கலந்து கொண்டனர். 


இவர்களுடன் துணைத் தலைவர் பூங்கோதை பழனி, மற்றும் வார்டு உறுப்பினர்கள் 2வது வார்டு உறுப்பினர் ரேணுகா கேசவன், அசோக் குமார், பவுனு ஏழுமலை, மோகனப்பிரியா, இளையராஜா, சந்திரபாபு, முரளிதரன், மற்றும் ஊராட்சி செயலாளர் எஸ்.காந்திமதி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad