காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில், ஆதனூர், டிடிசி நகர், பலராமபுரம், லட்சுமிபுரம், கொருக்கந்தாங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை மிகவும் அதிகமாக உள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு உதவும் வகையில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு இரண்டு கிலோ தக்காளி என்று 5000 குடும்ப அட்டைகளுக்கு 1000 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பொருளாதார சர்வின் காரணமாக கடந்த சில காலமாகவே எல்லா பொருட்களின் விளையும் ஏற்றமாக உள்ளது இந்நிலையில் அத்தியாவசிய உணவு பொருளான தக்காளியின் விலை கிலோ 150 தாண்டி செல்கிறது இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சி மக்களுக்கு வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன் இலவசமாக தக்காளிகள் வழங்கி உதவுகின்றார் என்பதை மிகவும் சந்தோஷம் அடைகிறோம் என்று கூறினார்.
No comments:
Post a Comment