தமிழக காவல் துறை யில் கடந்த 1988ம் ஆண்டு பணியில் சேர்ந்து, பரங்கிமலை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற போலீசார் தற்போது, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் முதல், டி.எஸ்.பி., வரையிலான பணிகளில் உள்ளனர்.
காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் உட்பட பலமாவட்டங்களில் பணிபுரியும் போலீசார் 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து விபத்து மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு உதவி செய்கின்றனர். இவர்களின் 3 வது ஒன்றுகூடல் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் 11.6. 2023 ம் தேதி நடந்தது.
துணை காவல் கண்காணிப்பாளர் அருள்மணி, இன்ஸ்பெக்டர் அப்பண்டைராஜ் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினர் சப் கலெக்டர் மனோகரன் (ஓய்வு) காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி ( ஒய்வு) உதவி ஆய்வாளர் (ஆசான்) ரவி ஆகியோர்கள் வாழ்த்தி பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் லோகநாதன், கோவிந்தசாமி, லோகநாதன்(ஓய்வு) எஸ்.ஐ.,க்கள் சிவக்குமார், பாஸ்கர், தங்கவேல் கடலூர் ராமச்சந்திரன், ராமையா, மோகனகிருஷ்ணன், பாலதண்டாயுதபாணி, விழுப்புரம் ராதாகிருஷ்ணன், சீத்தாபதி, சென்னை ரமேஷ், ஹரிகிருஷ்ணன், வேலூர் சத்யானந்தன் மற்றும் 1988 மவுண்ட் பேட்ஜ் போலீசார் கலந்துகொண்டு பயிற்சி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டும். செல்பி எடுத்தும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து உறவுகளை மேம்படுத்தி புத்துணர்ச்சி பெற்றனர்.
No comments:
Post a Comment