தமிழ்நாட்டில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் அறிமுகம் ஆகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். - தமிழக குரல் - காஞ்சிபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 May 2023

தமிழ்நாட்டில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் அறிமுகம் ஆகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.வி.எம்.பி. என்ற நகரில் உள்ள ரேஷன் கடையில் இந்த திட்டத்தை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். 

இந்த திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது ரேஷன் கடைகளில் ரொக்கமாக பணம் செலுத்தி மட்டுமே பொருட்கள் வாங்கப்பட்டு வருகிற நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட போகிறது என்பது குறிப்பிடப்பட்டது


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் தமிழ் செல்வன். 

No comments:

Post a Comment

Post Top Ad