காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.வெங்கடேசன் பிறந்த நாளை முன்னிட்டு லட்சுமி நாராயண திருமண மண்டபத்தில் மாபெரும் ரத்த தான முகாம் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாடம்பாக்கம் ஆட்டோ ஸ்டாண்ட், மாடம்பாக்கம் ரேஷன் கடை, மாடம்பாக்கம் முகாம்பிகை ரேஷன் கடை, வள்ளலார் நகர், குத்தனூர் பஸ் ஸ்டாப் 5 இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்ததுடன் மறைமலைநகர் முன்னாள் நகர் மன்ற தலைவர் எம் ஜி கே கோபி கண்ணன் கலந்து கொண்டு 1000 ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment