இவ்விழாவில் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடன போட்டி, மாறுவேட போட்டி, விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கான மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கே.செல்வப்பெருந்கை, சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, படப்பை அ.மனோகரன், காஞ்சி மாவட்ட குழு பெருந்தலைவர், சரஸ்வதி மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர், பாலவேல் சக்ரவர்த்தி உதவி செய்தி ஆசிரியர் நியூஸ் 18 தமிழ்நாடு ஊக்கமூட்டும் பேச்சாளர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
மேலும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன். குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை புரிந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment