காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளி கல்வி துறை, தி பிரிட்ஜ் அறக்கட்டளை வேலூர், மோபிஸ் இந்தியா பவுண்டேஷன் இணைந்து சந்தவேலூர் ஊராட்சியில், புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா 24.04.2023 காலை 10 மணி அளவில் சட்டமன்ற உறுப்பினர் செல்வம், மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் பிரேம் சாய், ஜனார்த்தனன், செல்வி.சௌமியா மற்றும் தி பிரிட்ஜ் அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், சதிஷ், நிதிஷ் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிறப்புரை வழங்கினர். மேலும் சந்த வேலூர் ஊராட்சி மன்ற தலைவர், வாழ்த்துரை வழங்கி, தலைமை ஆசிரியர் நன்றியுரை நல்கினர். இதில் வார்டு உறப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment