மனு அளித்த மாற்றுத்திறனாளி; 30 நிமிடத்தில் கோரிக்கையை நிறைவேற்றி காசோலை வழங்கிய காஞ்சி ஆட்சியர். - தமிழக குரல் - காஞ்சிபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 28 March 2023

மனு அளித்த மாற்றுத்திறனாளி; 30 நிமிடத்தில் கோரிக்கையை நிறைவேற்றி காசோலை வழங்கிய காஞ்சி ஆட்சியர்.


நேற்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்க்குட்பட்ட சிறுனை பெருக்கல் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி பெண்மணி சரண்யா (33) சுயதொழில் செய்வதற்கு உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளித்தார்.

உடனடி விசாரணை மேற்கொண்டு, தகுதி உடையவர் என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் மனு அளித்ததைத் தொடர்ந்து மனு மீது உடனடி விசாரணை மேற்கொண்டு உதவிதொகை பெற தகுதி உடையவர் என்பதை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 80 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி பெண்மணி சரண்யா கூறுகையில், “வயதான தாய் தந்தையுடன் பெரிதும் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். ஏரி வேலை மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் வைத்துதான் மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவுகளையும் பார்த்துக்கொள்கிறோம்.


இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுய தொழில் செய்வதற்கு உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளித்திருந்தேன். மனு அளித்த 30 நிமிடத்திற்க்குள் உடனடியாக பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்களின் விருப்புரிமை நிதியிலிருந்து பெட்டிக்கடை வைப்பதற்க்குகாக 80 ஆயிரம் ரூபாய்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு அரசுக்கு பெரிதும் நன்றியினை தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad