காஞ்சிபுரம் - செவிலிமேடு பாலாற்றில் இருந்து கீழம்பி செல்லும் புறவழிச்சாலை உள்ளது. உத்திரமேரூர், வந்தவாசி பகுதியில் இருந்து வேலுார், பெங்களூரு, அரக்கோணம் செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன.
இச்சாலையில், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால், பாலாறு மேம்பாலத்தை ஒட்டியுள்ள சாலை துவங்கும் இடத்தில் இருந்து, குறிப்பிட்ட துாரத்திற்கு சாலை சேதமடைந்து புழுதி பறக்கிறது. இதனால், அப்பகுதியில் சாலையோரம் உள்ள பச்சை பசேல் என இருந்த செடி, கொடிகளின் மீது சாம்பல் நிற துகள் படிந்துள்ளது. மேலும், இவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் துாசு விழுவதோடு, சுவாச கோளாறு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
எனவே, சேதமடைந்த நிலையில் செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment