கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த புறவழிச் சாலையில், கீழ்கதிர்பூர் அருகில் உள்ள அபாயகரமான சாலை வளைவில், சாலை வளைவு குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில், பலகை அமைக்கப்படவில்லை. இதனால், வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் வளைவு பகுதியில் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து கீழ்கதிர்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பசுமை மேகநாதன் கூறியதாவது: கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், கீழ்கதிர்பூர் அருகில், சாலை வளைவுப் பகுதியில், சாலை வளைவு குறியீடு அறிவிப்பு பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
கடந்த மாதம் இரவு நேரத்தில் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று சாலை வளைவில் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். சாலை வளைவு பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.எனவே, விபத்தை தடுக்கும் வகையில், சாலை வளைவு குறித்த குறியீடு அறிவிப்பு பலகை பொருத்த வேண்டும். மேலும் சாலை வளைவு பகுதியில், இரவில் ஒளிரும் வகையில் பிரதிபலிக்கும் பட்டைகள் அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment