காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி இந்திய நாடு ஒற்றுமை பெற வேண்டி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதனை மக்களுக்கு தெரிவிகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 150 இடங்களில் ஒவ்வொரு நாளும் மாலை இந்திய ஒற்றுமை பயண விளக்க பாதயாத்திரை விளக்க மற்றும் தெருமுனை கூட்டம் நடத்தபடுகிறது.
76ஆம் நாளான கடந்த 29.11.2022அன்று ஆர்.கே.நகர் 1வது வட்டம் சார்பில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் M.S.திரவியம் MC அவர்கள் ஏற்பாட்டில் வட்ட தலைவர் ஆர்.கே.நகர் சையத் PCC தலைமையில், 39B வட்ட தலைவர் M.மோகன்குமார் முன்னிலையில் நாகூரார் தோட்டம் மசூதி அருகே இந்திய ஒற்றுமை பயண விளக்க பாதயாத்திரையும், தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் G.B.மோகன்காந்தி, செய்தி தொடர்பாளர் D.B.பாஸ்கர் PCC, மாநில பொதுக்குழு உறுப்பினர் S. சுகுமாரன், வட்டத் தலைவர் G.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடி நின்று சிறப்புரையை கேட்டனர்.
No comments:
Post a Comment