தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கு கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் பங்கேற்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் கலைதிருவிழாவாக பள்ளி அளவில் 26.11.2022முதல் 2023 வரை நடைபெற்றன அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 52 நடுநிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 36 வகையான போட்டிகளும் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 78 வகையான போட்டிகளும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 82 வகையான போட்டிகளும் நிர்ணயிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 60 ஆயிரத்து 681 மொத்த மாணவர்களில் 46 ஆயிரத்து 191 மாணவர்கள் பள்ளி அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா நிகழ்வில் பங்கேற்றனர்என்பது இந்நிகழ்வின் சிறப்பு ஆகும்.
பள்ளி அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் கிட்ட தட்ட 19292 மாணவர்கள் வட்டார அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் திருபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய ஜந்து வட்டாரங்களில் 29.11.22 முதல் 03.12.22 வரை வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு ஆறு வகையான போட்டிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 79 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இன்று மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்து மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மதி.வெற்றிச்செல்வி காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் திருமதி. மலர் கொடிகுமார் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தமிழ்செல்வன்.
No comments:
Post a Comment