காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதுர் ஒன்றியத்திற்குட்பட்ட மதுரமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 78 -வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர். ஆனந்த்குமார் மற்றும் உதவி தலைமை ஆசிரியர். சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக திருப்பெரும்புதுர் ஒன்றிய குழு உறுப்பினர் கு. எல்லம்மாள் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சு.தனலட்சுமி சுருளி மற்றும் துணைத் தலைவர். அருள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள். சுந்தரம், அரங்கநாதன், சாந்தாமேரி மற்றும் மணிக்கண்ணன், பள்ளிக் கல்வி மேலாண்மை தலைவர். ஜெகதீசன், துணைத்தலைவர். சுருளி மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் முன்னாள் மாணவ, மாணவியர்கள், 1992-93 வருடம் பத்தாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வந்து பழைய நினைவுகளை பகிர்ந்ததோடு பள்ளிக்கு ரூ. 50,000 மதிப்பிலான கணினி உபகரணங்களை வாங்கி கொடுத்து மகிழ்ந்தனர். இறுதியாக கணினி ஆசிரியர். ஞானசந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment